Current Ministries
*ஆடம்பர ஊழியர்கள்* இன்றைக்கு எங்கு பார்த்தாலும் சபை கட்டுகிறோம் என்ற பெயரில் ஆடம்பர கட்டிடங்களை கட்டுவதற்க்கு பல உழியர்கள் எழும்பியுள்ளார்கள். முதலாவது ஒன்றை நாம் யோசித்து பார்க்க வேண்டும் வாரத்தில் ஒரு நாள் மட்டும் இரண்டு மணிநேரம் மட்டும் செலவு செய்ய இருக்கும் இடத்திற்க்கு எவ்வுளவு செலவு செய்ய வேண்டும் என்ற கணக்கு இல்லாமல் போய் விட்டது. கணக்கு இல்லா உழியர்களின் காணிக்கை பிரசங்கத்தை கேட்டு ஆவிக்குரிய கண் இல்லாத விசுவாசி கணக்கில்லாமல் காணிக்கை கொடுப்பதே இதற்க்கு முக்கிய காரணம். *சபை என்றால் என்ன?* *நடமாடத கட்டிடத்திற்க்குள் தேவன் நம்மை கொண்டு வந்து நம்மை நடமாடுகிற ஆலயமாக மாற்றுகிறார்* உங்கள் சரீரமானது நீங்கள் தேவனாலே பெற்றும் உங்களில் தங்கியும் இருக்கிற பரிசுத்த ஆவியினுடைய ஆலயமாயிருக்கிறதென்றும், நீங்கள் உங்களுடையவர்களல்லவென்றும் அறியீர்களா? இதில் நாம் தான் முக்கியம். வாரத்தில் 2 மணி நேரத்திற்கு வந்து அமர்ந்துவிட்டு போகிற கட்டிடத்திற்க்கு முக்கியத்துவம் கொடுக்காமல் நம்மில் வாசம் செய்ய விரும்பும் தேவனுக்கு முன்பாக நம்மை முக்கியாமாக்கி கொள்வோம். தே...