ஆசீர்வதிக்கும் கர்த்தர்.
ஆசீர்வதிக்கும் கர்த்தர்.

தேவன் தம்முடைய பிள்ளைகளின் வாழ்க்கையில் செயல்படும் வல்லமைக்கு அளவே இல்லை. தேவன் அளவற்ற வல்லமையுள்ளவறாக இருப்பதினால் நம்முடைய வாழ்க்கையில் தம்முடைய மகத்துவமான வல்லமையை வெளிப்படுத்த விரும்புகிறார் . நாம் தேவனை நோக்கி அநேக தேவைகளுக்காக, குறிப்பாக சுகத்துக்காகவும் சமாதானத்திற்குக்கும் அநேகக்காரியங்களில் தேவனுடைய வல்லமை வெளிப்படும்படியாக ஜெபிக்கிறோம். தேவனும் அதைத்தான் விரும்புகிறார் , நாம் அதிகமாய் ஜெபிக்கவேண்டும். நம்முடைய அனைத்துப் பாரங்களையும் தேவனுடைய பாதத்தில் வைக்கவேண்டும் , மிக சரியான ஒன்று. அதே சமயத்தில் நாம் நம்முடைய இக்கட்டான வேளையில் தேவன் எனக்கு ஒரு விடை தரவேண்டும் என்று எதிர்பார்க்கிறோம், இதுவும் ஒருவிதத்தில் நம்முடைய விசுவாசத்தை அதிகப்படுத்தக்கூடிய ஒன்று.
ஆனால், நம்முடைய ஜெபமும் எதிர்ப்பார்ப்பும், நினைவும் குறுகிய வட்டத்திலே இருக்கிறது . தேவன் இவ்விதமாக செயல்படவேண்டும் என்று நம்முடைய மனித அறிவின் அளவில் எண்ணுகிறோம், இங்கு நாம் தாவீதை நினைப்போம் தாவீதுக்கு தன்னுடைய சொந்த குமாரனாலேயே அவருக்கு தீங்கு ஏற்பட்டது அனாலும் கர்த்தர் தாவீதோடே இருந்து பாதுகாத்தார், தாவீதுக்கு விரோதமாய் வந்த அனைத்து போராட்டங்களின் நடுவிலும் கர்த்தர் ஜெயத்தை தந்தார் .
தேவன் நமக்கு ஜெயத்தை தருவார் என்று விசுவாசிக்க வேண்டும் . நம்முடைய ஜெபம் குறைவுள்ளது, மாம்சத்தில் நாம் பெலவீன பட்டவர்கள் தான் . ஆனால், கர்த்தரால் கூடாத காரியம் ஒன்றும் இல்லை, அவர் நம்முடைய ஜெபத்திற்கு பதில் தருகிற தேவன்.
ஜெபம் பண்ணுங்கள்.
1 கொரிந்தியர் 14 :15
இக்கட்டுக்களில் இன்னும் அதிகமாய் ஜெபம் பண்ணுங்கள்.
சங்கீதம் 141: 5
Comments
Post a Comment