ஆசீர்வதிக்கும் கர்த்தர்.
ஆசீர்வதிக்கும் கர்த்தர். “நாம் வேண்டிக்கொள்ளுகிறதற்கும், நினைக்கிறதற்கும் மிகவும் அதிகமாய் நமக்குள்ளே கிரியை செய்கிற தேவன் ” (எபே 3:20). தேவன் தம்முடைய பிள்ளைகளின் வாழ்க்கையில் செயல்படும் வல்லமைக்கு அளவே இல்லை. தேவன் அளவற்ற வல்லமையுள்ளவறாக இருப்பதினால் நம்முடைய வாழ்க்கையில் தம்முடைய மகத்துவமான வல்லமையை வெளிப்படுத்த விரும்புகிறார் . நாம் தேவனை நோக்கி அநேக தேவைகளுக்காக, குறிப்பாக சுகத்துக்காகவும் சமாதானத்திற்குக்கும் அநேகக்காரியங்களில் தேவனுடைய வல்லமை வெளிப்படும்படியாக ஜெபிக்கிறோம். தேவனும் அதைத்தான் விரும்புகிறார் , நாம் அதிகமாய் ஜெபிக்கவேண்டும். நம்முடைய அனைத்துப் பாரங்களையும் தேவனுடைய பாதத்தில் வைக்கவேண்டும் , மிக சரியான ஒன்று. அதே சமயத்தில் நாம் நம்முடைய இக்கட்டான வேளையில் தேவன் எனக்கு ஒரு விடை தரவேண்டும் என்று எதிர்பார்க்கிறோம், இதுவும் ஒருவிதத்தில் நம்முடைய விசுவாசத்தை அதிகப்படுத்தக்கூடிய ஒன்று. ஆனால், நம்முடைய ஜெபமும் எதிர்ப்பார்ப்பும், நினைவும் குறுகிய வட்டத்திலே இருக்கிறது . தேவன் இவ்விதமா...